ஈரோட்டில் அஞ்சல் துறை குறைகேட்புக் கூட்டம் செப்டம்பர் 23 - ஆம் தேதி நடைபெற உள்ளது . இதுகுறித்து ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஈரோடு மதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது . இதில் பொதுமக்கள் அஞ்சல் துறை சேவைகள் குறித்து குறைகள் , கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மனுக்கள் மூலமாக தெரிவிக்கலாம் . இதற்கான மனுக்களை அஞ்சல் மூலமாக வரும் 19 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் , ஈரோடு கோட்டம் , ஈரோடு- 638001 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் . தவிர அலுவலகத்தில் 19 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்க ளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை நேரில் அளிக்கலாம் . மனுவில் சம்பந்தப்பட்ட கோரிக்கையின் முழு விவரமும் இருக்க வேண்டும் . உரையின் மேல் பகுதியில் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment