குறைதீர் கூட்டத்தில் 410 மனுக்கள் ஏற்பு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் , கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் , மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது . வீட்டுமனை பட்டா , மாற்றுத்திறனாளி உதவித்தொகை உட் பட , 410 மனுக்கள் பெறப்பட்டு , உரிய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . கட்டுமான பணியிட விபத்தில் மரணமடைந்த நான்கு தொழிலாளர் குடும்பத்தினருக்கு தலா , 1. 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை கலெக்டர் வழங்கினார் . கிறிஸ்தவ தேவாலய உபதேசியார் , பணியாளர் , 10 பேருக்கு நலவாரிய அட்டை உட் பட , 11 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டது . டி . ஆர் . ஓ . , சாந்தகுமார் , சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ் , மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment