மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் , மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் , ஈரோடு எம்.பி. பிரகாஷ் தலைமையில் , ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ( செப் .10 ) நடந்தது . இதில் , 44 திட்டங்கள் சார்ந்த பணி ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது . வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது . கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா , எம்.பி. , க்கள் சுப்பராயன் , செல்வராஜ் , எம்.எல்.ஏ. , க்கள் வெங்கடாசலம் , சரஸ்வதி , மாநகராட்சி கமிஷனர் மணீஷ் , எஸ்.பி. , ஜவகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment