ஈரோடு , சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து , நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் செல்கிறது . இதன் மூலம் 2,450 ஏக்கர் பாசனம் பெறுகிறது . 15 கி.மீ. , தூரம் கொண்ட வாய்க்காலில் ஆண்டுக்கு 10 மாதங்கள் நீரோட்டம் இருக்கும் . கடந்த , 10 ஆண்டுகளுக்கு முன் வாய்க்கால் துார்வாரப்பட்டது . தற்போது புதர் மண்டி , குப்பைக்கழிவு அடைத்துள்ளதால் , நீரோட்டம் தடைபட்டுள்ளது . இதுகுறித்த புகாரால் நீர்வளத்துறை அலுவலர் திருமூர்த்தி தலைமையில் , அலுவலர்கள் வாய்க்காலை ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பினர் .
இந்நிலையில் வாய்க்காலை துார்வாரும் பணி நேற்று ( செப் .10 ) தொடங்கியது . இதனை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார் . இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது : வாய்க்காலில் மக்கள் குப்பை கொட்டுகின்றனர் . இதனால் கடை மடை வரை தண்ணீர் செல்வதில்லை . இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தூர்வாரும் பணி துவங்கி உள்ளது .
குப்பை கொட்டாமல் இருக்க வாய்க்காலின் இரு புறமும் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் வழங்கியவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் , இடங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டது . இவற்றில் 5,500 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment