ஈரோடு , திருப்பூர் மாவட்டங்களில் உரிமம் பெற்ற விதை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் , முளைப்பு திறன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே , விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய வேண்டும் . விதை விற்பனை செய்யும் போது , உரிய விற்பனை ரசீதில் விவசாயிகளின் பெயர் , முகவரி , அலைபேசி எண் குறிப்பிட்டு , விவசாயி கையொப்பம் பெற்று , ரசீது வழங்க வேண்டும் . உண்மை நிலை விதைகளை வினியோகஸ்தர்கள் , சில்லறை விற்பனையாளர்க ளுக்கு அனுப்பும் போது விதை குவியலுக்குரிய பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலுடன் அனுப்ப வேண்டும் . விதை விற்பனையாளர்கள் , பகுப்பாய்வு முடிவு அறிக்கை பெறப்படாத நிலையில் , அந்த விதை குவி யலில் இருந்து பணி விதை மாதிரிகள் எடுத்து , அதை விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைத்து , பகுப்பாய்வு முடிவுகள் பெற்ற பின்னரே உண்மை நிலை விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் . பகுப்பாய்வு முடிவுகள் விரைவில் தேவைப்படும் பட் சத்தில் , முன்னுரிமை முறையில் ஆய்வுக்கு அனுப்பி பெற்று கொள்ள வேண்டும் . விபர அட்டையில் , 14 விபரங்களுடன் உள்ள உண்மை நிலை விதைகளின் உண்மை நிலை அட்டையை , சிப்பங்களில் பொருத்தி இருக்க வேண்டும் . விதிகளை மீறுவோர் மீது , விதை சட்டம் , விதை விதிகள் , விதை கட்டுப்பாடு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு கூறியுள்ளார் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment