ஈரோடு மாவட்ட வீடியோ போட்டோ சங்கத்தின் எபிக் அறக்கட்டளை வழங்கும் உறுப்பினர்களுக்கான விபத்து உதவித் தொகை திட்டம் துவக்க இன்று 08.09.2024 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது :
இத்திட்டம் குறித்து EDVPA மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் எபிக் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது, இத்திட்டத்தின் நோக்கம் எபிக் அறக்கட்டளையின் பங்களிப்பாளர்கள் தங்களுடைய பங்களிப்புத் தொகையை நிலுவையில்லாமல் செலுத்தி வருகின்ற பட்சத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தினால் உண்டான மருத்துவமனை சிகிச்சை செலவிற்கு உதவித்தொகை அளிப்பது மற்றும் பங்களிப்புத் தொகையை நிலுவையில்லாமல் செலுத்தி வருகின்ற பங்களிப்பாளர் விபத்து உதவித் தொகை திட்டத்திற்கென தனிக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை . அறக்கட்டளையின் பங்களிப்பாளர்களுக்கு சேவை செய்வது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது
அறகட்டளையில் இணைந்துள்ள சத்தி ,குமாரபாளையம் ,பவானி ,சென்னிமலை தாலுக்கா பகுதி வீடியோ போட்டோகிராபர் களும் பயனடையமுடியும்
இந் நிகழ்ச்சியில் மாவட்ட சங்க நிர்வாகிகள் அற கட்டளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment