ஈரோடு மாவட்டத்தில் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் குறிஞ்சி ப. சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் M N சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியை திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் திருமதி ஜெ வீரமணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சுதந்திரப் போராட்டத்தில் கிளர்ச்சி ஏற்படுத்தி உயிர் நீத்த ஏழு பழங்குடியினர் தியாகிகள் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி வாழ்த்துரை வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி கே சரஸ்வதி, காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் வேதனானந்தம், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் வி செல்வராஜ், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் ஜி ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் ஈரோடு மண்டல செயலாளர் பெ.சா.சிறுத்தை வள்ளுவன், பேராசிரியர் மா.கருணாகரன், ஸ்ரீ சக்தி ப்ரமோட்டர்ஸ் உரிமையாளர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் குறிஞ்சிய பேரவையின் முக்கிய நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நன்றியுரை கே சோமசுந்தரம் கூறி இனிதே விழா நடைபெற்றது.
No comments:
Post a Comment