கருகும் கடலைச் செடிகள் ... விவசாயிகள் வேதனை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 September 2024

கருகும் கடலைச் செடிகள் ... விவசாயிகள் வேதனை :


ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி , காலிங்கராயன் , தடப்பள்ளி -அரக்கன் கோட்டை , மேட்டூர் மேற்கு கரை உள்ளிட்ட முக்கிய பாசனங்கள் உள்ள போதிலும் கனிமான அளவுக்கு மானாவாரி நிலங்களும் உள்ளன . பவானி , அந்தியூர் , நம்பியூர் , பெருந்துறை , புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன . மழையை மட்டும் நம்பி உள்ள மானவாரி நிலங்களில் கடலை , சோளம் , தட்டைப்பயறு , பாசிப்பயறு உள்ளிட்டவைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் ஆடி பட்டத்தை ஒட்டி கடலை விதைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது . அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக செடிகள் நன்கு வளர்ந்து வந்தது . இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருவதாலும் மழை பொழிவு இல்லாததாலும் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கடலை செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக அந்தியூர் , பருவாச்சி செம்புளிச்சாம் பாளையம் , இரட்டை கரடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கடலை செடிகள் பயிரிடப்பட்டுள்ளது . இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருவதால் கடலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment