சிறுமியை கர்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளி போக்சோவில் கைது : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

சிறுமியை கர்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளி போக்சோவில் கைது :


பவானி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் . ஈரோடு மாவட்டம் பவானி , ஊராட்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிரி முருகன் ( 21 ) , கூலி தொழிலாளி . கிரி முருகன் பவானியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார் . சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவாரத்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . இதில் அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்தார் . சிறுமி நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை ஆஸ்பத்திரியில் சோதனை செய்தபோது கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார் . இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கிரி முருகனை போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment