ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் வட்டம் , கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெற்கு தோட்ட சாலையானது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும் இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டி அந்தப் பகுதி விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கெம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆயினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உதவியை நாடினர்
அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல் கட்டமாக மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும் என்றும் அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுத்து மனு கொடுக்கும் இயக்கமானது முதலில் கெம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் கே.ரவிசந்திரனிடம் மனு கொடுக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி.இளங்கோவிடம் மனு கொடுக்கப்பட்டது,
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் ஆகியோர் உடனடியாக பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரு. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மனுக்கொடுக்கும் இயக்கத்தில் அமைப்புச் செயலாளர்கள் ஜோதி அருணாச்சலம், சத்தியமங்கலம் நகரச் செயலாளர் குபேந்திரன் சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் ஒன்றிய அவை தலைவர் சோமசுந்தரம் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகள் பிரிவு செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment