இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் நேற்று ( செப் .9 ) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் . டி பிரபாகரன் தலைமை வகித்தார் . மாநில செயற்குழு உறுப்பினர் எம் . ரவி கோரிக்கை விளக்க உரையாற்றினார் . இதில் ஏழை எளிய உழைக்கும் மக்களை பாதிக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பாஜக கூட்டணி அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன . இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கே . ஆர் . திருநாவுக்கரசு மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சி . எம் . துளசி மணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment