சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் ஈரோடு கலெக்டர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு . க ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : பருவம் தவறிய மழை திடீர் வெள்ளம் கடும் வறட்சி கடும் வெப்பம் உள்ளிட்ட இயற்கை சீரழிவுகளால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் எடுக்கப்படும் மண்ணை விஷமாக்கி உணவை நஞ்சாக்கி , ஆறுகளை மணல் குவாரிகளாகவும் , மலைகளை உடைத்தும் தொழிற்பேட்டைகள் என்ற பெயரில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை சீரழிக்கும் விதமாக , தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர் . சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை விளைவித்து வரும் வகையில் பணியாற்றி வருகின்றனர் . எனவே அந்த ஆணையத்தின் அலுவலர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்து நேர்மையான அலுவலர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment