ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது . இங்கு நேற்று ( செப் .7 ) காலை லக்காபுரம் கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் - உமாதேவி என்கின்ற தம்பதி அவர்களது மூன்றை வயது குழந்தைக்கு சப்பாத்தி சாப்பிடுவதற்காக வாங்கி தந்துள்ளனர் . அந்த சப்பாத்தியை சாபஃபிட முயன்ற போது அது கெட்டு போனது போல் துர்நாற்றம் வீசியது , உடனே குழந்தைக்கு அந்த சப்பாத்தியை தராமல் சோதித்து பார்த்துள்ளனர் , அப்போது அந்த சப்பாத்தி கெட்டுப் போனது தெரிய வந்துள்ளது . ஏற்கனவே கடந்த 4 நாட்களாக அந்த குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , கெட்டுப்போன சப்பாத்தியை கொடுத்ததால் தம்பதியர் ஆத்திரமடைந்து உணவகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஹோட்டல் பணியாளர்கள் பெற்றோர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் உணவகத்தின் சட்டரை சாத்திவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றனர் . குழந்தைக்கு கெட்டுப்போன சப்பாத்தி கொடுத்ததாக பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் , ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment