தொப்பு வாய்க்காலில் அடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேற்றம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 September 2024

தொப்பு வாய்க்காலில் அடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேற்றம் :



ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலின் கொப்பு வாய்க்கால் பாதையில் குப்பைகளால் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேறி வருவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஈரகோடு மாவட்டம் திண்டல் அடுத்துள்ள வித்யா நகரில் கீழ்பவானி கால்வாயின் கொப்பு வாய்க்கால் செல்கிறது . இந்நிலையில் திண்டல் மேட்டில் இருந்து வள்ளிபுரத்தான் பாளையம் செல்லும் சாலையில் தண்ணீர் செல்வதற்கு சிறிய குழாய் பதிக்கப்பட்டுள்ளது . கொப்பு வாய்க்கால் கரையில் வசித்து வரும் மக்கள் மற்றும் உணவகங்கள் குப்பையை கொட்டி வருவதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் தண்ணீர் செல்லமுடியாமல் அதன் அருகிலேயே வெளியேறி வருகிறது . இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய குழாய்க்கு பதிலாக பெரிய குழாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment