கோபிசெட்டிபாளையத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 September 2024

கோபிசெட்டிபாளையத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு :


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி . என் . பாளையம் அருகே புஞ்சை துரையம்பாளையத்தில் உள்ள கல்குவாரியி கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் . இதில் குவாரி முறையான உரிமம் பெறாமல் செயல்பட்டது தெரியவந்து . இந்த விவகாரத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் . இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் விநியோக திட்ட வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் பொறுப்பு கூடுதலாக கவனித்து வந்த இந்த நிலையில் ஈரோட்டில் சமூக நலப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணிபுரிந்த இரா . சரவணன் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் நியமிக்கப்பட்டார் . இதையடுத்து நேற்று ( செப் .16 ) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment