மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ( செப் .12 ) உயிரிழந்தார் . இதை அடுத்து அவரது உடல் கல்லூரியின் மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்கு தானமாக வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரியின் இறுதி அஞ்சலி கூட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது . அதன்படி ஈரோட்டில் நேற்று ( செப் .13 ) மாலையில் பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது . இந்த இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர் . ரகுராமன் தலைமை வகித்தார் . இதில் திமுக சார்பில் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கந்தசாமி , மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. பா . சச்சிதானந்தம் , அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் , முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் . தென்னரசு மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் பொதுநல அமைப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment