ஈரோட்டில் வடமாநிலத்தவர் பங்கேற்ற ராம்தேவ் பெருமாள் கோயில் 25 - வது ஆண்டு தேர்த் திருவிழா நேற்று ( செப் .13 ) வெகு விமரிசையாக நடந்தது . ஈரோட்டில் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பல ஆண்டுகளாக வசிக்கும் , ராஜஸ்தான் உள்பட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தோர் , ஈரோடு மணிக்கூண்டு அருகே வெங்கடாசலம் வீதியில் 27 ஆண்டுகளுக்கு முன் , ராம்தேவ் பெருமாள் கோவிலை உருவாக்கினர் . இக்கோயிலில் ஆண்டுந்தோறும் ராம்தேவ் பெருமாள் தேர்த்திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம் . அதன்படி , நடப்பாண்டு 25 - வது ஆண்டு தேர்த்திருவிழா , கடந்த 5 ம் தேதி தொடங்கியது . நாள்தோறும் சிறப்பு வழிபாடு , பூஜை நடந்தது . நிறைவு நாளான நேற்று காலை கோவிலில் இருந்து ராம்தேவ் பெருமாள் உருவச்சிலை தேரில் எடுத்து வரப்பட்டது . நேதாஜி ரோடு , சத்தி ரோடு , பிருந்தாவன் வீதி , ஈஸ்வரன் கோவில் வீதி , காமராஜ் வீதி , வெங்கடாச்சலம் வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது . ஊர்வலத்தில் ஆண்கள் , பெண்கள் , சிறுவர்கள் , குழந்தைகள் என 1000 க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பங்கேற்றனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment