" வி.சி.க. , மாநாடு என்பது அரசுக்கு எதிரானது அல்ல " மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக , துறை ரீதியாக ஆலோசித்து தான் முடிவு வெடுக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 September 2024

" வி.சி.க. , மாநாடு என்பது அரசுக்கு எதிரானது அல்ல " மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக , துறை ரீதியாக ஆலோசித்து தான் முடிவு வெடுக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார் :


ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் , முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை , வீட்டு வசதித்துறை அமைச்சரல் முத்துசாமி தொடங்கி வைத்தார் . பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது :


வி.சி.க. , சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசுக்கு எதிரானது அல்ல . அந்த மாநாடு என்பது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் மாநாடு . எந்தக் கட்சி வேண்டுமானலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்தலாம் . இதனை அரசியலாக தொடர்புப்படுத்தி , திமுகவை எதிர்ப்பதாக கொண்டு செல்வது தவறு .


இந்த மாநாட்டில் அரசுக்கு பின்னடைவு இல்லை . மதுவை இந்த அரசு திடீரென துவக்கியது அல்ல . இந்த அரசு மதுவை தொடங்கி , அதற்கு மாநாடு நடந்தால் அதுதான் பின்னடைவு . மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக , துறை ரீதியாக ஆலோசித்து தான் முடிவு வெடுக்கப்படும் . இவ்வாறு அவர் பேசினார் . அப்போது , மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா , விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment