காவலர்களிடம் சிக்கிய வட மாநில கொள்ளையர்கள் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 September 2024

காவலர்களிடம் சிக்கிய வட மாநில கொள்ளையர்கள் :



கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்கள், தமிழகத்திற்கு தப்பி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வெப்படை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று வாகனங்களை இடித்துவிட்டு நிற்காமல் செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது, அந்த கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஹரியான மாநிலத்தை சேர்ந்த அசர்அலி என்பவரின் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனையடுத்து மற்ற கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்த போலீசார், வெப்படை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அசர்அலியை மீட்ட போலீசார், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அசர்அலியை கொண்டு வந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment