ஊட்டியில் இருந்து ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்ட உடல் உறுப்பு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 September 2024

ஊட்டியில் இருந்து ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்ட உடல் உறுப்பு :


நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்த தேயிலை பறிப்பு தொழிலாளி அர்ஜீனன் என்பவர் உடல்நலன் பாதிக்கப்பட்டு, உதகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அர்ஜீனனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததை அடுத்து, உரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல் உறுப்புகளான ஒரு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஆகியவற்றை ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதனையடுத்து வரும் வழிகளில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனையடுத்து தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை பாதுகாப்பு பெட்டியில் வைத்த மருத்துவர்கள், காவல்துறையின் எஸ்கார்ட் வாகன பாதுகாப்புடன் புறப்பட்டனர். அதனை தொடர்ந்து வழியெங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த போலீசார், உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதை தொடர்ந்து, சுமார் 2 மணிநேரத்தில் ஈரோட்டிற்கு வந்தடைந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment