ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் 10 இடங்களில் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக மக்கள் ஜவுளி நகை வீட்டு உபயோக பொருட்கள் வாங்க அதிக அளவில் கடை வீதிகளில் கூடுவது வழக்கம். ஈரோடு மாநகரம் மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்த மக்கள் வருவார்கள் இதனால் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து குற்ற செயல் தடுப்பு நடவடிக்கை, கூட்ட நெரிசலை ஒழுங்கு செய்தல், வாகன போக்குவரத்தை சீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஈரோடு பஸ் நிலையம், ஜி எச் ரவுண்டானா, பன்னீர் செல்வம் பார்க், மணிக்கூண்டு, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, அங்காளம்மன் கோவில் பிரிவு முன்புறம், ஆர் கே வி சாலை, காளை மாடு சிலை உள்ளிட்ட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கண்காணிக்க உள்ளோம். இது தவிர பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், பவானி சப் டிவிஷனில் உள்ள முக்கிய கடைவீதி பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். விஜயதசமி பண்டிகைக்கு பின் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment