ஈரோட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொண்டத்து ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு அருகே உள்ள கோண வாய்க்கால் கொண்டத்து ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வு நாளான இன்று அங்காளம்மனுக்கு ஸ்ரீ மகிஷா சுரவர்த்தினி அலங்காரத்திலும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் க்கு ஸ்ரீ நாகத்தம்மன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதன் இடையே தலைமை பூசாரி மாது சுவாமி அக்னி குண்டத்தில் பக்தர்களுக்கு அருள் வாக்கு அருளினார்.தொடந்து வந்திருந்து திரளான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் நவராத்திரி விழாவின் இறுதி நாள் வரும் 12ஆம் தேதி விஜயதசமி அன்று கொண்டத்து ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை , அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் அலங்காரம் செய்து சீர்வரிசை படைத்து பூஜை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு தமிழக குரல் நிருபர் பூபாலன்
No comments:
Post a Comment