ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாகனத்தில் வந்து உள்ளனர்.
அப்போது, ஒரு அரசு அதிகாரியின் நான்கு சக்கர வாகனமானது (ஜீப்) ஸ்டார்ட் ஆகாமல் பழுதாகி நின்று உள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சிலர் பழுதாகி நின்ற அதிகாரியின் நான்கு சக்கர வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்தான வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ. கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment