பகுதிநேர வேலை ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.13.41 லட்சம் மோசடி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 December 2024

பகுதிநேர வேலை ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.13.41 லட்சம் மோசடி :



ஆன்லைனில் கவர்ச்சிகரமான விளம்பரம், கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி நாளுக்கு நாள் மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் விளம்பரங்களை நம்பி ஏமாறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பலர் ஏமாந்து வருகின்றனர்.


ஈரோடு கதிரம்பட்டி, மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (36). ஆன்லைனில் பகுதிநேர வேலையை தேடினார். சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நபர் பொருட்களை விற்றால் கமிஷன் தரப்படும் என்று தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய நந்தகுமார் முதல் தவணையாக ரூ. 900 அனுப்பினார். அதற்கு உரிய பொருட்கள் வந்து கமிஷன் கிடைத்தது. பின்னர் அவரை படிப்படியாக ஆசை காட்டி தொகை அதிகரிக்கச் செய்தனர். சமூக வலைதள நபரை நம்பி நந்தகுமார் ரூ. 13 லட்சத்து 41 ஆயிரத்து 434 ரூபாய் வரை அனுப்பி உள்ளார்.


அதன் பின்னர் நந்தகுமாருக்கு பொருட்களும் வரவில்லை, கமிஷன் பணமும் வரவில்லை. சில நாட்களில் சமூக வலைத்தளத்தில் அறிமுகமான அந்த நபர் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தகுமார் இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் தெரிவித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் இந்த வழக்கு ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி.

No comments:

Post a Comment