சீமை கருவேல மரங்களை அகற்றி கொள்ள விடப்பட்ட ஏலம் ரத்து : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 December 2024

சீமை கருவேல மரங்களை அகற்றி கொள்ள விடப்பட்ட ஏலம் ரத்து :



ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைப்பகுதிக்குள் சுமார் 164 ஹெக்டேர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருந்தன. அதனால் ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடது கரை பகுதியில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை மட்டும் தனியார் மூலம் அகற்றிக்கொள்ள நீர்வளத்துறை சார்பில் கடந்த மாதம் 26-ந் தேதி பாசன பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.


இந்த ஏலத்தில் 147 பேர் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் ஏல முன்வைப்பு தொகை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தை வங்கி வரைவோலையாக செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் தம்மரெட்டிபாளையத்தை சேர்ந்த துரைசாமி என்ற விவசாயி ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்திருந்தார். மேலும் அவர் ஏல தொகையுடன் சேர்த்து சரக்கு மற்றும் சேவை வரியாக 47 ஆயிரத்து 340 ரூபாயையும் பாசன பிரிவுக்கு செலுத்தியிருந்தார்.


இந்த நிலையில், ஏற்கனவே விடப்பட்ட ஏல தொகைக்கு மேல் சிலர் கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்டு நீர்வள துறை அதிகாரிகளிடம் ஆட்சேபனை கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் கடந்த 26-ந்தேதி நடந்த ஏலத்தை ரத்து செய்வதுடன், ஏல தொகையையும் திரும்ப ஒப்படைப்பதாக ஏலம் எடுத்திருந்த துரைசாமிக்கு உதவி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இனி விரைவில் கூடுதல் தொகைக்கு மறுஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment