மரவள்ளி கிழங்குக்கு சரியான விலை இல்லாததால் கிழங்கு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசுக்கு
அவர் அனுப்பிய கடிதத்தில்
கூறியுள்ளதாவது: தேசிய அளவில்
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான்
மரவள்ளிக்கிழங்கு அதிகம் சாகுபடி
செய்யப்படுகிறது எனவும், ஜவ்வரிசி
ஸ்டார்ச் ஆலைகளும் இங்க
தான் அதிகமாக உள்ளது எனவும்
கூறியுள்ளார்.
மேலும், ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு கடந்த ஆண்டு 12,900 ரூபாய்க்கு மேலாக விற்பனையானது. ஆனால், தற்போது வெறும் ரூபாய் 6000 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. சிவவாதிகளிலும் மரவள்ளிக்கிழங்கை அடிமாட்டு விலைக்கு கூட கொள்முதல் செய்ய தயாராக இல்லை.
விலைவீழ்ச்சியால் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை வீதியில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற சமயங்களில் அரசே விலையை நிர்ணயித்து கொள்முதலுக்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment