ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், திம்பம் மலைப்பாதை, ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பரவலாகப் பெய்து வரும் மழையால் மலைவாழ் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த தலமலை என்னும் கிராமம் அடர்ந்த வனப் பகுதியில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று (டிச.1 4)காலை சத்தியமங்கலத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடிக்கு அரசு பஸ் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த அரசு பஸ் தலமலை அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது கனமழை காரணமாக அந்த பகுதியில் இருந்த மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் ஒன்றிணைந்து சாலையின் நடுவே விழுந்திருந்த மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து அந்த பகுதியில் போக்குவரத்து சீராகி மீண்டும் வாகனங்கள் இயங்க தொடங்கியது. இதைப்போல் திம்பம் வழியாக சாலையின் இருபுறம் ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மூங்கில் மரங்கள் எந்த நேரமும் சாலையில் விழும் அபாயம் உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.
No comments:
Post a Comment