ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், கள்ளியம்புதூரை சேர்ந்தவர் புஷ்பா (58). இவரது தந்தை பழனிசாமி (90). கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் புஷ்பாவின் கணவர் இறந்துவிட்டார். புஷ்பா அங்குள்ள தறிப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். புஷ்பாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், புஷ்பாவின் தந்தை பழனிசாமியும் வயது முதிர்வு காரணமாக கடந்த சில வருடங்களாக படுத்தபடுக்கையாக இருந்துள்ளார்.
அவருக்கு விஜயமங்கலம் பகுதியில் சமூக பணிகள் செய்து வரும் சுந்தரமூர்த்தி என்பவர் தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் உணவு வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் மாலை சுமார் 5.30 மணி அளவில் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த பழனிசாமி யாரிடமோ பீடி வாங்கி தீப்பெட்டியை பற்றவைத்து பீடி குடித்துள்ளார்.
அப்போது பீடி நெருப்பு, அவர் படுத்திருந்த நைலான் பாயில் விழுந்து தீப்பிடித்து, அவரது உடலிலும் தீப்பற்றி எரிந்துள்ளது. பின்னர் பழனிசாமி சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனிசாமி உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.
No comments:
Post a Comment