மயில்கள் பெருக்கத்தால் பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 December 2024

மயில்கள் பெருக்கத்தால் பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை



ஈரோடு காலிங்கராயன் பாசன பகுதிகளான, பெருமாள் மலை, ஆர். என். புதூர், கண்ணாம்பு ஓடை, வைரபாளையம்,கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில், சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

தற்போது, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தாெடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாசன பகுதிகளில் அண்மைக்காலமாக மயில்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களை கூட்டம், கூட்டமாக வரும் மயில்கள் கொத்தி தின்கிறது. இந்த மயில்களை துரத்தினாலும் ஆள் இல்லாத போது மீண்டும் காட்டுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.


நாட்டின் தேசிய பறவையாக மயில்கள் உள்ளதால் இவற்றை தாக்கவோ, கொல்லவோ கூடாது என வனத்துறை எச்சரிப்பதால் மயில்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி.

No comments:

Post a Comment