ஈரோடு வ. உ. சி காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, மைசூர், மதனப்பள்ளி, குப்பம், தெலுங்கானா போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். கடந்த சில நாட்களாக மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது. சாதாரண நாட்களில் வ உ சி மார்க்கெட்டிற்கு 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்து வெறும் 2 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் தக்காளியின் விலை அதிகரித்து கிலோ ரூ.80 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 9) முதல் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. வ உ சி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, தெலுங்கானா, தாளவாடி போன்ற பகுதிகளிலிருந்து அதிகளவு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. வ. உ. சி. மார்க்கெட்டுக்கு 10 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 30 முதல் 40 வரை விற்கப்பட்டது. 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.400 - 500 வரையும், 14 கிலோ தக்காளி பெட்டி ரூ. 180 - 250 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம் , ஈரோடு.
No comments:
Post a Comment