தமிழ்மாநில விவசாயத்தொழிலாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட,"ஈரோடு மாவட்ட நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்சங்கம் இன்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புபின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து1. 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை காலை 7 மணிக்கு வர சொல்லாதே2. சட்டவிரோதமாக வேலை நேரத்தை அதிகரிக்காதே3. 8 ரூபாய் விலை உயர்வை திரும்பப் பெறு 4. தினக்கூலி 300 ரூபாயாக நிர்ணயத்திடு.5. வேலை நாட்களை 150 ஆக உயர்த் திடு போராட்டத்தினை நடத்தினர்.
இப்போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தார், சங்க ஒன்றிய செயலாளர்கள் தாளவாடி மோகன், நாராயணன், ஆசனூர் அருள்சாமி, கடம்பூர் ராமசாமி, மகேஷ், சத்தியமங்கலம் எஸ்.சி.நடராஜ், எம்.சுரேந்தர், பவானிசாகர் எஸ்.மகேந்திரன், பி.ஏ.வேலுமணி, சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சி.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்த்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும்-சங்கதின் மாநில பொதுச்செயலாளருமான நா.பெரியசாமி, ஏஐடியூசி தொழிற்சங்கங்களின் மாநிலத் தலைவரும்-திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன் ஆகியோர் பேசினர்.
சத்தி வட்டாடசியர் முன்னிலையில் தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது மற்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment