இன்று (30 ஏப்ரல் 2022) சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு சங்கம் தமிழர் எழுச்சி மாநாடு 2022 நடத்தப்பட்டது, அதில் கலாம் உலக சாதனையாளர்கள் நிகழ்வில் பள்ளிபாளையம் கலைத்தாய் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் நட்சத்திர சிலம்பம் இதனை 2 மணி நேரம் இடைவிடாமல் சுற்றி உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
தலைமை ஆசான் கராத்தே இரா. ஆனந்த் அவர்களுக்கு உலகத் தமிழர் பண்பாட்டு சங்கம் கலைச் செம்மல் விருது வழங்கி சிறப்பித்தது.. உலக சாதனையாளர்கள் யுகநாத், விவேக், மைலேஸ்வரன், நவிநீதன், மேக் ஷானந்த் , பரணிதரன், சௌந்தர் கண்ணன், தருனேஸ், ஜீவானந்தம், தமிழ்ச்செல்வன், காவியா மணி, அபி ஸ்ரீ, க.பிரியதர்ஷினி, தௌ பரணிகா, ஜனனி, அனுஸ்ரீ, ரித்திகா, ஈ.பிரியதர்ஷினி, ஸ்ருதி, சாதனா ஸ்ரீ, பிரதிகா. உலகத் தமிழர் பண்பாட்டு சங்கம் மாணவ மாணவியருக்கு கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment