பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா, ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோயில் பொங்கல் திருவிழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா, ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோயில் பொங்கல் திருவிழா.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் திருவிழா ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவிலில் வேல் எடுத்துச்சென்று சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றில் வேல் சுத்தப்படுத்தும் பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றதுஅதனைத் தொடர்ந்து நேற்று காலை மாவிளக்கு பூஜையும் மாலை கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக அழகு குத்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கம்பம் எடுத்து கங்கையில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் பொங்கல் பூஜையும் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. 

இப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றதால் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி தனது குடும்பத்தினருடன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஊர் கவுண்டர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. 

No comments:

Post a Comment