கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து ஆய்வுப் பணி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து ஆய்வுப் பணி.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து ஆய்வுப் பணி மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு கோபி ஆர்டிஓ பழனி தேவி தலைமை தாங்கினார், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் மாண்புமிகு சு. முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு ஆய்வு பணி மேற்கொண்டதுடன் விவசாயிகளிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தார். 


பின்னர் இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி அவர்கள் கூறியதாவது கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து விவசாயிகள் கருத்து கேட்பு மற்றும் ஆய்வுப் பணி தற்போது செய்து வருகிறோம் இதில் சுமார் 140 இடங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறோம் எந்த ஒரு விவசாயியும் பாதிக்கும் படியாக இத்திட்டம் இருக்காது. 


பாதிப்பில்லாமல் செயல்படுத்துவதே இந்த அரசின் தலையாய நோக்கமாகும் அதேநேரம் கடைமடை விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்தவும் முழு அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் தரைத்தளம் நிச்சயமாக கான்கிரீட் தளமாக அமைக்க மாட்டோம் பக்கவாட்டு பகுதிகளில் 200 மீட்டர் 400 மீட்டர் தொடர்  காங்கிரட் தளம் வந்தாள் விவசாயிகளின் வசதிக்கு ஏற்ப இடைவெளிவிட்டு காங்கிரீட் தளம் அமைக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் 33 சதவீதம் கழிவு நீர் மற்றும் ஊற்று நீரை பயன்படுத்தும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு. சில பகுதிகளில் தூர்வாரப்பட்டு அந்த மண் கரையை பலப்படுத்த பயன்படுத்தப்படும்  என்று அமைச்சர் கூறினார். 


ஆய்வின்போது நம்பியூர் பேரூராட்சி தலைவரும்,  நம்பியூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளருமான மெடிக்கல் ப. செந்தில்குமார் அவர்கள் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் , ஒன்றிய துணை  செயலாளர் மைக்பழனிசாமி ஒன்றிய திமுக பொருளாளர் என் சி சண்முகம், ஆர்.பி. எஸ். பழனிச்சாமி, வேலுச்சாமி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், கீழ்பவானி பாசன சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment