இந்த மாநாட்டில் கீழ்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன
- கடந்த ஆட்சியில் 2018 வருவாய் பங்கீடு முறை சட்டத்தை கொண்டுவந்ததை தற்போதைய அரசு திரும்பப் பெற்று ஒரு டன் கரும்புக்கு ரூ 4000 விலை அறிவித்து வழங்கிட வேண்டும்.
- கரும்பு வெட்டு கூலியை ஆலைகள் 50 சதவீதமும் விவசாயிகள் 50 சதவீதமும் கொடுக்கும் வகையில் மாநில அரசு உத்தரவிட வேண்டும்.
- திம்பம் பாதையில் மாலை 6 மணிக்கு மேல் வாகனம் செல்ல உள்ள தடையை விவசாயிகள் பொதுமக்கள் நலன் கருதி தடை நீக்க வேண்டும்.
- கரும்பு மகசூல் அதிகரிக்க புதிய ரக கரும்புகளை விவசாயிகளுக்கு வழங்கிட பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தமிழக அரசு 2013 14 முதல் 2016 17 வரை நான்கு ஆண்டுகள் காலத்திற்கு மாநில அரசின் பரிந்துரையை விலை பாக்கி ரூ 1,2 17 கோடியில் பண்ணாரி அம்மன் ஆலை கொடுக்க வேண்டிய தொகை ரூ 36 ஆயிரம் கோடி தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்.
- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புப்படி லாபத்தில் பங்கு கொடுக்க 1966 கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 3 இன் படி 5ஏ பங்கு தொகையை பெற்றுத் தர வேண்டும்.
- கரும்பு விவசாயிகளுக்கு பண்ணாரியம்மன் ஆலை கல்வி நிறுவனங்களில் கல்லூரிகளில் பயில, தொழிற்சாலையில் வேலைவாய்ப்புகளில் 25% இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன . இந்த தமிழ்நாடு விவசாய சங்க மாநாட்டில் சங்கத்தின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் விவசாயிகளும் பெருந்திரளானோர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment