ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு எண்ணமங்கலம் ஊராட்சி, பி டி ஏ மற்றும் நகார்ட்டு நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கு பூமியை எவ்வாறு மாசில்லாமல் பாதுகாப்பது என்றும் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஐம்பது மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ் எம் டி சி, தலைவர் நகார்ட் நிறுவன தலைவர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment