சத்தியமங்கலம் கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இருநாட்கள் குழந்தைகள் புத்தகக் காட்சி மற்றும் விற்பனை தொடக்கவிழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

சத்தியமங்கலம் கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இருநாட்கள் குழந்தைகள் புத்தகக் காட்சி மற்றும் விற்பனை தொடக்கவிழா.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இருநாட்கள் குழந்தைகள் புத்தகக் காட்சி மற்றும் விற்பனை தொடக்கவிழா நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இன்றைய விழாவில் விதைகள் வாசகர் வட்டம் தலைவர் திரு.யாழினி ஆறுமுகம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.


சத்தி கிளை நூலகர் ஆ.சாந்தி  அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.வட்டார கல்வி அலுவலர் திருமதி  சு.தேவகி அவர்கள் குழந்தைகள் புத்தக காட்சியினை தொடங்கி வைத்து உரையாற்றினார். எழுத்தாளர் உழவுக் கவிஞர் உமையவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.


தமிழறிஞர் எழுத்தாளர் முத்துரத்தினம் அவர்கள்,வளரும் எழுத்தாளர் தென்னவன் அவர்கள்,நூலக வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் சுந்தரராஜ், திரு.ஸ்டாலின் சிவக்குமார், கவிஞர் பழனிசாமி, சாதிக் பாட்சா, அப்துல் ஜப்பார், பொன்.பிரபாகரன், வினோத் ராஜேந்திரன், ராஜலட்சுமி, உட்பட இலக்கிய ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும் வருகைபுரிந்து சிறப்பித்தனர். நிறைவாக மேட்டூர் அனல்மின்நிலையம் இளமின்பொறியாளரும்,தீவிர வாசகருமான திரு.சங்கரேஸ்வரன் அவர்கள் நன்றியுரை கூறினார். நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment