தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) சத்தி கிளையின் 2 வது மாநாடு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) சத்தி கிளையின் 2 வது மாநாடு.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  (தமுஎகச)  சத்தி கிளையின் 2 வது மாநாடு, 2022 மே 8-ல், சத்தி ஜேம்ஸ் பள்ளியில்  நடைபெற்றது. 


சத்தி கிளைத்தலைவர்  திரு.சு.சரத் அருள்மாரன் மற்றும் கிளைப் பொருளாளர்  திருமதி.சு.யுவப்பிரியா தலைமையேற்று நடத்திய இம்மாநாட்டில், ஜேம்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. P.ஜேம்ஸ் குணராஜ் மாநாட்டிற்கு முன்னிலை வகித்துப் பேசினார். எழுத்தாளர் முத்துரத்தினம் வரவேற்புரையாற்ற, மாவட்ட துணைச் செயலாளர் தோழர். கி. கணேசன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.  


கிளைச் செயலாளர் தோழர்.  கோ.சுரேஷ்  அறிக்கை முன்வைத்தார். முன்னதாக, சிறுவர்களின் சிலம்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது, பல குரல் நிகழ்ச்சியை திரு. வா.பிரதாப் அரங்கேற்றினார், அரசுப் பள்ளி மாணவி அனுஷா,  முற்போக்குப்  பாடல் பாடினார். திரு.சங்கரேஸ்வரன் மற்றும் விதைகள் வாசகர் வட்டச் செயலாளர் திரு.C.பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர்.


சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், தலைவர்  - தோழர். ராஜலட்சுமி, துணைத்தலைவர் தோழர். சடையலிங்கம், செயலாளர் - எழுத்தாளர்  முத்துரத்தினம், துணைச்செயலாளர் - எழுத்தாளர்  கௌரி காமாட்சி, பொருளாளர் - எழுத்தாளர் யாழினி ஆறுமுகம்

செயற்குழு உறுப்பினர்களாக உ. மாரிச்சாமி, கு. மாரிச்சாமி, தினேஷ்குமார், ச. ரஞ்சித்குமார், பொ. அழகர்சாமி, எழுத்தாளர். கௌரி காமாட்சியின் "மூன்றாம் தலைமுறை" நூலை, எழுத்தாளர் முத்துரத்தினம் வெளியிட மாவட்டச் செயலாளர் தோழர். மு.சங்கரன்  பெற்றுக் கொண்டு நிறைவுரையாற்றினார்.   தோழர். சடையலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment