பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறும் வகையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பவானிசாகர் பேரூராட்சி தலைவர் திரு மோகன் அவர்கள் திறந்து வைத்தார்.
புதிய அடையாள அட்டை பெறுதல், பழைய அட்டை புதுப்பித்தல், udid கார்டு பெறுதல், உதவி உபகரணங்கள் பெறுதல், மருத்துவ ஆலோசனைகள் என மொத்த பயனாளிகள் 122 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
நிகழ்வினை பவானிசாகர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் திருமதி விஜயராணி, திரு செல்வன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன், ஜெயஸ்ரீ, நந்தினி தேவி ஆகியோர் பார்வை செய்தனர்.
முகாமினை பவானிசாகர் வட்டார வளமைய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் திரு இரமேசு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்கள்.



No comments:
Post a Comment