இந்திய விடுதலைப் போராட்டத்தில் 17ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் 72 பாளையங்கள் இருந்தது அதில் பாஞ்சாலங்குறிச்சியில் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்து வந்தார் அவருடன் ஊமைத்துரை துரைசிங்கம் பாதர் வெள்ளை தனாதிபதி பிள்ளை மற்றும் கந்தன் பகடை பொட்டிப் பகடை முத்தன் பகடை ஆகியோர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு படைத் தளபதிகளாக இருந்துள்ளனர் ஆங்கிலேயரை எதிர்த்து கிபி 1799 நடைபெற்ற போரில் கந்தன் பகடை கொரிலா படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் ஆங்கிலேயே படை தளபதி லார்ட் மெக்காலே கந்தன் பகடையை சுட்டுக் கொன்றனர்.
மேலும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட ஊமைத்துரை துரைசிங்கம் உள்பட 45 பேரை பாளையங்கோட்டை சிறையில் இருந்து மீட்டு உள்ளார்கள் இதனால் ஆவேசம் அடைந்த ஆங்கிலேயர் படைத்தளபதி அக்னிபூ என்பவர் பொட்டிப் பகடை முத்தன் பகடை ஆகியோரை சுட்டுக்கொன்றனர் இந்திய விடுதலைப் போரில் முதன் முதலில் துப்பாக்கியை பயன்படுத்தி ஆங்கிலேயரை சுட்டுக்கொன்ற பெருமை வீரத் தளபதிகளான கந்தன் பகடை பொட்டிப் பகடை முத்தன் பகடை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் கந்தன் பகடை திருவுருவப்படம் இன்றும் உள்ளது எனவே இவர்களுடைய வீரவரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு கந்தன் பகடை பொட்டிப் பகடை முத்தன் பகடை ஆகியோருக்கு திரு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் பாஞ்சாலங்குறிச்சி அமைக்கப்படவேண்டும்.
221 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தலித் விடுதலை இயக்க மாவட்டத் தலைவர் பொன் சுந்தரம், அருந்ததியர் மக்கள் விடுதலை இயக்க தலைவர் ஆர்கே சாமிநாதன், இந்திய கண சங்கம் கட்சி துணைத் தலைவர் என் கே துரைசாமி, மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர்கள் பிஎஸ் சண்முகம், எம் கே ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் செந்தில், ஜெகநாதன், சக்திவேல், கண்ணையன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment