ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ள சத்தியமங்கலத்தில் வசிப்பவர் சசிகுமார் இவர் இன்று மதியம் தனது நண்பர்களுடன் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மார்க் மதுபான கடைக்கு சென்றுள்ளார் தனக்கும் தனது நண்பர்களுக்கும் மதுபானத்தை வாங்கிக்கொண்டு ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து பார்த்தபோது திறக்கப்படாத பாட்டிலுக்குள் ஏதோ கருப்பாக உருண்டையாக தென்பட சசிகுமார் விற்பனையாளரிடம் சென்று முறையிட்டுள்ளார் அப்போது கடை விற்பனையாளர் வேறொரு பாட்டிலை வாங்கிச் செல்லவும் என கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சசிகுமார் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அரசு மதுபானக் கடையில் மது பாட்டிலில் அசுத்தம் கலந்து விற்பனை செய்வது மது பிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment