கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
1) தமிழக அரசு! நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டியுள்ள பாதிப்பு ஏற்படுத்தாத வீடுகளுக்கு பட்டா வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை வீடுகளை இடிக்காமல் இருக்கவும் ஆய்வுக் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும்.
2) ஈரோடு மாநகராட்சி நிர்வாகமே நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏழை மக்களின் வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் பூங்கா, சாலைகள் நடைபாதை விளையாட்டு மைதானம் போன்ற கட்டுமான பணிகள் நடைபெறுகிறது . இப்பணிகள் நடைபெறும் இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பு இல்லையா? எனவே பெரும்பள்ளம் ஓடையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்து விட்டால் பெரும்பள்ளம் நீர்வழிப்பாதைக்கு பாதிப்பு இருக்காது எனவே வீடு இடிக்காமல் நீர்வழி பாதைக்கு பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும். பெரும்பள்ளம் ஓடை ஓரம் பெரியார் நகர் பகுதியில் அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி காட்டிஉள்ளதை போல் வீடுகளை கட்டி கொடுத்து பட்டா வழங்க வேண்டும்.
3) வருவாய்த்துறை நிர்வாகமே! நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று 7.6 எண் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பகுதிகளுக்கு பட்டா உள்ளது. எனவே 7.6 எண் நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும். அதேபோல் ஓடை என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பழைய கிராம கணக்குகளில் பூங்கா, இட்டேரி, வண்டிப்பாதை எனவும் பதிவாகியுள்ளது எனவே வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி. பி. ஐ .எம் மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.ரகுராம் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. பழனிச்சாமி, ஆர்.கோமதி எஸ் சுப்பிரமணி ,சி. முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி சுந்தரராஜன், என். பாலசுப்பிரமணி, பி ராஜா, பா.லலிதா ஆகியோர் முன்னிலை வகித்து போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் சி. பி .ஐ. எம் கட்சியின் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கொண்டார்கள்.



No comments:
Post a Comment