வரும் 29ஆம் தேதி செல்லம்பாளையம் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

வரும் 29ஆம் தேதி செல்லம்பாளையம் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் எண்ணமங்களம் ஊராட்சி செல்லம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சரவணன் விஷன் சென்டர் & டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 29.5.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மயில் கந்தசாமி தலைமையில் நடைபெறுகிறது. 


இம்முகாமில் சர்க்கரை நோயாளிகளுக்கு கண் நரம்பு பரிசோதனை,கண் நீர் அழுத்த நோய், கண் புரை, ஒற்றைத் தலைவழி , தூரப்பார்வை,கருவிழியில் புண்,குழந்தைகளின் கண் நோய், கண்ணாடியின்றி பார்க்க லாசிக் சிகிச்சை மற்றும் கண் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்படும்.


இந்நிகழ்ச்சியில் அனைத்து ஊர் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment