ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் பணி நிரந்தரம், குறைந்த பட்ச ஊதிய அமலாக்கம் கொரோனா ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் இடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.
சங்க மாவட்ட தலைவரும் ஏஐடியுசி மாநில செயலாளருமான எஸ். சின்னசாமி, சங்க கிளை தலைவரும் ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவருமான இரா. ஸ்டாலின் சிவகுமார், சங்க நிர்வாகிகள் தோழர்கள் கே. சக்திவேல், எம்.பாபு, ஆர்.ராமகிருஷ்ணன் மற்றும் 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோருதல், சத்தியமங்கலம் நகராட்சியில் பொது சுகாதார பிரிவில் சுமார் இருநூறு பேர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இதில் 69 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள் அவர், மற்ற நூறுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் பல்லாண்டு காலமாக தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. தற்போது நாளொன்றுக்கு ரூ.490/—மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, இவர்களின் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கைகள்:
- நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும். தற்போது பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நகராட்சியில் நேரடி பணியாளர்களாக்கி,480 நாட்கள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- 1948—ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் ஆன நாளொன்றுக்கு ரூ.592/–(மாதத்திற்கு–அடிப்படை சம்பளம் ரூ. 10,000/–+அகவிலைப்படி ரூ 540/–ஆக மொத்தம் ரூ. 15,401/–) வீதம் கடந்த 1.4.2022 முதல் ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் முந்தைய ஆண்டுகளுக்கு நிர்ணயித்து அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அதாவது 2020–2021 ஆம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு ரூ. 561/–வீதமும், 2021–2022 ஆம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு ரூ. 578/–வீதமும் கணக்கிட்டு ஆரியர்ஸாக வழங்க வேண்டும்.
- அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் மாதந்தோறும் சம்பள ரசீது வழங்கப்பட வேண்டும்.
- அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (PP) வருடாந்திர கணக்கு அறிக்கை வழங்க வேண்டும்.
- அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட இஎஸ்ஐ உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.
- குரு அண்ணா காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய அனைத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டிபிசி பணியாளர்களுக்கும் அரசு அறிவித்த குறுந்தொகை ரூ. 15,000/–வழங்க வேண்டும்.
- அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழிற் கருவிகள் முறையாக வழங்க வேண்டும்.
- அனைத்து வகையான குப்பை வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டி கடை அவ்வப்போது பழுது நீக்கி பராமரிக்க வேண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment