ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் அளிக்கும் காவல் தெய்வமாக விளங்கும் வரதம்பாளையம் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் கம்பம் திருவிழா குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கடந்த இரண்டாண்டுகளாக கொரானா காரணத்தினால் இவ்விழா நடைபெறவில்லை . இந்த வருடம் இந்த கோவிலில் கம்பம் சாட்டுதல் உடன் பவானி நதிக்கரையில் தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்கள். இன்று 12 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . முதலில் பூசாரி சண்முகம் குண்டம் இறங்கிய உடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment