மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க மோட்டார் வாகனங்களின் தேவை அதிகரித்து சாலைகளில் வாகனநெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்கும்விதமாக அரசு பலவகையான முயற்ச்சிகளை எடுத்துவரும் நிலையில் அதில் ஒரு முயற்ச்சியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் நகரங்ளுக்கிடையேயான கிராமச்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக ஆய்வுப்பனிகளில் ஒன்றான வாகன கணக்கெடுக்கும் பணியானது அந்தந்த பகுதி சாலை மேற்பார்வையாளர்கள் தலைமையில் கணக்கெடுக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
மேற்கன்ட பணியானது கவுந்தப்பாடியிலிருந்து ஐயன்வலசு வழியாக சிங்காநல்லூர் செல்லும் முக்கிய சாலையில் மாணிக்காவலசில் நடைபெற்றது.இப் பணியில் மேற்பார்வையாளர் திரு.கைலாசம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் மற்றபனியாளர்கள் சிலர் பங்கேற்புடன் நடைபெற்றது.

No comments:
Post a Comment