ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர், காவல் நிலைய உதவியாளர் திரு ஆர். ரபீ மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கே.செல்வம், பாலகிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் காவலர் ஆர். மைந்தன், சி.ஐ.டி. தங்கராஜ் ஆகியோர் புளியம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட டானா புதூர் சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனை செய்தபோது அவனாசி லிருந்து புளியம்பட்டி நோக்கி வந்த கே ஏ09 எம்ஜி 5330 என்ற காரில் சந்தேகப்படும் படியாக இருந்த ஆறு நபர்கள் 1) சசிதரன் வயது 60 தந்தை பெயர் ராகவன், தலசேரி கேரளா. 2) கே எம் இஸ்மாயில் வயது 32 தந்தை பெயர் முகமத் கேரளா 3) கே இ முகமத் தந்தை பெயர் இப்ராஹிம் கர்நாடகா 4), ரஷீத் வயது 41 தந்தை பெயர் அதாம் கர்நாடகா 5), ஜாஹித் வயது 23 தந்தை பெயர் அமீர் கர்நாடகா ஆகியோரை விசாரித்தபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த கிருஷ்ணர் சிலை ஒன்றும் நாகர் சிலை ஒன்றும் விநாயகர் சிலை ஒன்று மொத்தம் மூன்று சிலைகள் வைத்திருந்தார்கள்.
இந்த சிலையை விருதுநகர் வத்திராயிருப்பில் உள்ள சாந்தா விடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து . அந்த சிலையை பாலிஸ் செய்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. இவர்களை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் ஆய்வாளர் திருமதி.ஏ. இந்திராணி சோபியா அவர்களிடம் ஒப்படைத்து.
இவர்கள் மீது வழக்கு (எஃப் ஐ ஆர்) பதியப்பட்டுள்ளது. உடனடியாக இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளார்கள்.

No comments:
Post a Comment