திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் நேர்கொண்ட பார்வையுடன் கல்வி கற்க வேண்டும் என்றும் விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றும் அரசுக் கலைக் கல்லூரியில் கல்வி கற்பதின் அத்தியாவசத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தும் பேசினார்.
முன்னதாக, 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான உடற்கல்வித் துறை ஆண்டறிக்கையினை உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு வகிக்கும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் க. பொங்கியண்ணன் அவர்கள் வாசித்தார். விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுக்கோப்பைகளும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ரா. நாராயணசாமி வரவேற்றார். பொருளியல் துறைத் தலைவர் முனைவர் க. ராமசாமி நன்றியுரையாற்றினார். இச்சிறப்புமிகு விழாவின் இனைப்புரையை தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் அ. பழனிசாமி மற்றும் முனைவர் வான்மதி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
No comments:
Post a Comment