மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு அளிக்கும் கோரிக்கைகள்.
கோரிக்கை - 1.
பட்டியிலின மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்பில் 3% சதவீத தனி இட ஒதுக்கீடு 2009-இல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது இதனால் அருந்ததியர் சமூகத்தினர் மருத்துவம் பொறியியல் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு உயர் பதவிகளில் கணிசமாக இடம் பெற்று முன்னேறி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் பரிந்துரையின்படி 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அருந்தியர் சமூகத்திற்கு 3 சதவிகித வழங்கப்பட்டது 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அருந்தியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கோரிக்கை -2.
அருந்ததியர் சமூகப் உட்பிரிவுகள் சக்கிலியர், மாதிகா, மாதாரி, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா, ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒரே பெயரில் அருந்ததியர் என அரசாணை வெளியிட வேண்டும்.
கோரிக்கை -3.
கொங்கு மண்டலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன்சின்னமலை யுடன் இணைந்து போரிட்ட மாவீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க கடந்த ஆண்டு ஒரு கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆனால் இதுவரை இந்த பணியை மேற்கொள்ளவில்லை விரைவில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும்.
மாவீரன் பொல்லான் 217வது நினைவு நாள் ஆடி1 (17-7-2022) அன்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவீரன் பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நல்லமங்காபாளையத்தில் தமிழக அரசு நடத்த வேண்டும்.
கோரிக்கை -4.
சிவகங்கை சீமையில் இராணி வேலுநாச்சியாரின் தளபதியாகவும் தற்கொலைப் படை போராளியாக உயிர்நீத்த போராளி வீரத்தாய் குயிலிக்கு சிவகங்கையில் ராணி வேலுநாச்சியார் மண்டபத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.... சிவகங்கையில் வீரத்தாய் குயிலிக்கு தனியாக மணி மண்டபம் மற்றும் திருஉருவ சிலை அமைக்க வேண்டும்.
கோரிக்கை -5.
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கோரிக்கை - 6.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் பொதுமக்களுக்கு குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது... அதேபோல் விவசாயிகளுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும், மாதந்தோறும் தனியாக குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது, அதேபோல பட்டியலின மக்களுக்கும் மாதந்தோறும் குறைதீர்க்கும் நாள் தமிழக அரசு நடத்த வேண்டும்.
கோரிக்கை -7.
பட்டியலின மக்களுக்கு தாட்கோ மூலம் 30 சதவீதம் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களை நிராகரிக்க படுகிறார்கள் வங்கிகள் கடனுதவி வழங்க மறுக்கின்றனர் இதனால் பட்டியலின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு மிகவும் பின்னடைவு ஏற்படுகிறது எனவே தாட்கோ மூலம் நேரடியாக கடனுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் குறித்து சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் பேசினார்.
No comments:
Post a Comment