மேலும் ஏற்கனவே வரும் ஆழ்குழாய் கிணறு மூலமாக வரும் நீரும் அசுத்தமாக உள்ளது என்றும் ஆற்று நீர் வேண்டி ஏகாளி கோவில் மேடு பொதுமக்கள் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திரு மிகு.மா.சுப்பிரமணி அவர்களிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.தங்கராஜ் அவர்களிடமும் தண்ணீர் குடங்களை எடுத்துக்கொண்டு வந்து சி.சங்கீதா மகளிர் அணி பொறுப்பாளர் அவர்கள் தலைமையில் மனு கொடுத்தனர்..
மனுவை பெற்றுக்கொண்ட இருவரும் உடனடியாக மக்களுக்கு தேவையான குடிதண்ணீர் வசதி செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்கள். உடன் ஆதித்தமிழர் பேரவை ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி நம்பியார் ஒன்றிய செயலாளர் கு.சேகர், மா.சின்னச்சாமி, நம்பியூர் ஒன்றிய பொருப்பாளர், சண்முகம் நம்பியூர் பொருப்பாளர், க.குப்புராஜ் கிளை செயலாளர் ஏகாலி கோயில் மேடு கிளை திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி, தலைவர் வெற்றிவேல் அவர்களும் ஏகாளி கோவில் மேடு பகுதி மக்களும் கலந்து கொண்டார்கள்

No comments:
Post a Comment